×

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை முதல் 5 நாள் விடுமுறை: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் வரும் 18ம் தேதி வரை என 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி அனைத்து வகை பள்ளிகளுக்கும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் நாளை முதல் வரும் 18ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி, நாளை 14ம் தேதி போகிப் பண்டிகை, 15ம் தேதி தைப்பொங்கல், 16ம் தேதி மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், 17ம் தேதி காணும் பொங்கல், உழவர் திருநாள், 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறையடுத்து 5 நாட்கள் அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். அதை தொடர்ந்து, வரும் 19ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். மேலும் பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,School Education Department ,Chennai ,Pongal festival ,Thai Pongal ,
× RELATED மொழி, இனம், பண்பாடு சிதைந்து விட்டால்...