தேசிய செட்டியார் பேரவை ஆலோசனை கூட்டம்

தேனி, ஜன.26: தேனி மாவட்ட தேசிய செட்டியார்கள் பேரவை ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி அமைப்பாளர் சிவகாமி சுந்தரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள 130 ஊராட்சிகளுக்கும் தாமதமின்றி நிதிக்குழு மானிய நிதியை உடனே வழங்க வேண்டும். இதன் மூலம் ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். லோயர் கேம்ப் முல்லைப் பெரியாற்றின் அருகே புதிய அணை கட்ட வேண்டும். கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் திராட்சை பழங்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்.

உத்தமபாளையம் அரசு மருத்துவமனை தாலுகா அந்தஸ்து பெற்றது. அதனை தரம் உயர்த்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு விரைவாக ஊதியம் வழங்க வேண்டும். தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் சென்னையில் அடுத்த மாதம் பிப்ரவரி 27ம் தேதி முதல் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் ஐம்பதாயிரம் பேர் குடும்பத்தோடு பங்கேற்பது என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: