இருளாயி கோவிலில் கும்பாபிஷேக விழா

கமுதி, ஜன.26:   கமுதி இருளாயி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. கோவில் முன்பு பிரம்மாண்டமாக பந்தல் போடப்பட்டு, அதில் யாக சாலை, அக்னி குண்டங்கள் அமைக்கப்பட்டன. அப்பகுதி முழுவதும் தோரணங்கள் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. கணபதி பூஜை, லட்சுமி, நவக்கிரகம் ஹோமங்கள் நடைபெற்றது. மாலையில், கணபதி பூஜை, பாலிகை இடுதல், கும்ப அலங்காரம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து மஹாகும்பாபிஷேக விழாநடைபெற்றது. கலசங்களில் புனிதநீர் ஊற்றும் போது பருந்து அப்பகுதியில் சுற்றி வந்தது. அதனை பக்தர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பின்னர் இருளாயி அம்மன், கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து கலந்து கொண்டனர்.

Related Stories: