×

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் ஜன.15, 16ம் தேதியில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் கலெக்டர் தகவல்

தூத்துக்குடி, ஜன. 9: தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வரால் சென்னையில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழா வரும் 14ம் தேதியன்று தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் சென்னையில் மக்கள் கூடும் 20 இடங்களில் வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை பாரம்பரிய நாட்டுப்புறக்கலைகள் மற்றும் செவ்வியல் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி, முத்துநகர் கடற்கரையில் கலை பண்பாட்டுத் துறை, நெல்லை மண்டலக் கலை பண்பாட்டு மையம் மூலமாக வரும் 15 மற்றும் 16 ஆகிய (வியாழன், வெள்ளி) இரண்டு நாட்கள் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் மக்கள் விரும்பும் வகையில் பாரம்பரியமிக்க கிராமியக் கலைநிகழ்ச்சிகள் சுமார் 100 கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இவ்விழாவினை பொதுமக்கள் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Pongal festival ,Muthunagar beach ,Thoothukudi ,Collector ,Ilam Bhagwat ,Chief Minister ,Sangamam-Namma Uru festival ,Chennai ,Chennai… ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரும்படி சப்.கலெக்டரிடம் கோரிக்கை