- அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- வீரபாண்டியன்பட்டினம் ஐடிஐ
- திருவேந்தூர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- இடி
- வீரபாண்டியன்
- வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சி
- வளாகத்தில்
- திருச்செந்தூர்
திருச்செந்தூர், ஜன. 9: வீரபாண்டியன்பட்டினம் அரசு ஐடிஐ பயிற்சி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசின் மடிக்கணினிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார். திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் அரசு ஐடிஐ வளாகத்தில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் அரசின் மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார். ஐடிஐ முதல்வர் அருள் வரவேற்றார். மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 209 மாணவ- மாணவியருக்கு அரசின் மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், திருச்செந்தூர் ஆர்டிஓ கவுதம், டிஎஸ்பி மகேஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரதிகலா, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை, திமுக மாவட்ட அமைப்பாளர்கள் மீனவரணி தர் ரொட்ரிகோ, இளைஞரணி ராமஜெயம், விளையாட்டு மேம்பாட்டு அணி ஜனகர், வழக்கறிஞரணி செல்வகுமார், இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஜே.ஜெகன், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், ஜெயக்கொடி, நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், சுதாகர், முத்துக்குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கிருபாகரன், ஆனந்த் ரொட்ரிகோ, டேனியல் ஜெபசிங், சுரேஷ், ரஜூலா, ஜெகதீஸ் வீ.ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி அலுவலர் சுந்தரராஜ் நன்றி கூறினார். தொடர்ந்து திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-26ம் கல்வியாண்டில் 3ம் ஆண்டு பயிலும் 247 மாணவர்களுக்கு மடிக்கணினியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
