உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடு: அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு

சென்னை: உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார். மாணவர்கள் கல்வியில் உயர இன்றைய அரசு உதவிகரமாக இருக்கிறது. நாங்கள் படிக்கும்போது நோட்டு, புத்தகம் எல்லாம் நாங்கள்தான் வாங்க வேண்டும். தற்போதுள்ள மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், பஸ் பாஸ், புத்தகம் போன்றவற்றை அரசே வழங்குகிறது. காலில் போடும் காலணி முதல் கணினி வரை அரசே வழங்கி மாணவர்களை படிக்க வைக்கிறது என தெரிவித்தார்.

Related Stories: