சாத்தான்குளம், ஜன. 8: சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொசு ஓழிப்பு புகைமருந்து அடிக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. மேலும் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதாலும், குளிர் அதிகரித்து இருப்பதாலும் அனைத்து இடங்களிலும் கொசுக்களும் அதிகரித்துள்ளது. இதனால் கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சுகாதாரத்துறை சார்பில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து அறைகள் மற்றும் வராண்டா, வீதிகளில் கொசு புகைமருந்து அடிக்கப்பட்டது. இதேபோல் அனைத்து அரசு அலுவலங்களிலும் கொசு புகைமருந்து அடிக்கப்பட்டது. சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சித்துறை இணைந்து அனைத்து கிராம பகுதிகளிலும், பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களிலும் கொசு புகைமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
