ஆறுமுகநேரி, ஜன. 8: ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் நடந்த பொங்கல் தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் பரிசு வழங்கினார் . ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் பொங்கல் தின முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கோலப் போட்டி, கயிறு இழுத்தல், சிறுவர் சிறுமிகளுக்கான ஓட்டம் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். இதில் இன்ஸ்பெக்டர் ஆத்தூர் பிரபாகரன், ஆறுமுகநேரி எஸ்ஐ வாசுதேவன் உள்பட போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
