தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி..!!

சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார். டி.என்.ஏ. சோதனையில் கிரிசில்டாவின் குழந்தையின் தந்தை நான் என தெரியவந்தால் பொறுப்பேற்க தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிசில்டா சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை மாதம்பட்டி ரங்கராஜுடையது தான் என்றும், இதனை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் தயார் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.

Related Stories: