×

பாக். அரசு விழாவில் இம்ரான் புகைப்படம் வைத்திருந்த 7 பேர் கைது

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலாவில் அரசு சார்பில் சனியன்று கலாச்சார விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் கவ்வாலி பாடகர் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்றனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் புகைப்படத்தை வைத்திருந்ததோடு, கைதி எண் 804 என்ற தலைப்பில் (சிறையில் இம்ரான் கானின் அறை எண் 804 என்பதை குறிக்கும் வகையில்) பாடலை பாடினார்கள். இதனால், பாடகரும் அவரது குழுவினர் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Tags : Pak ,Imran Khan ,Lahore ,Gujranwala, Punjab province ,Pakistan ,
× RELATED ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை...