×

வங்கதேசத்தில் திருட்டு பழி சுமத்தி கும்பல் துரத்தியதில் கால்வாயில் குதித்த இந்து நபர் பலி

டாக்கா: வங்கதேசத்தின் வடமேற்குப் பகுதியில் திருட்டுப் பழியைச் சுமத்தித் துரத்திய ஒரு கும்பலிடம் இருந்து தப்பிப்பதற்காகக் கால்வாயில் குதித்த 25 வயது இந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நவோகான் மாவட்டத்தில் மிதுன் சர்க்கார் என்ற 25 வாலிபர் மீது திருட்டு பட்டம் சுமத்தி ஒரு கும்பல் துரத்தியது. இதனால் பயந்து போன மிதுன், அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் இருந்த ஒரு கால்வாயில் குதித்தார். இதில் துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் மட்டும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 51 வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இதில் 10 கொலைகள், 10 திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் நிலங்களை ஆக்கிரமித்தல், தீவைப்பு தொடர்பான 23 சம்பவங்கள் அடங்கும் என்று வங்கதேச இந்து பவுத்த கிறிஸ்தவ ஒற்றுமைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் காஜல் தேப்நாத் நேற்று தெரிவித்தார். டிசம்பரில் இளைஞர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான தொடர் சம்பவங்களால் வங்கதேசத்தில் உள்ள இந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Bangladesh ,Dhaka ,northwestern Bangladesh ,Nawabganj ,
× RELATED அமெரிக்காவில் நுழைய 7 நாடுகளுக்கு தடை: டிரம்ப் அதிரடி உத்தரவால் அதிர்ச்சி