சென்னை: தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் என தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மேலும் ‘பொங்கலுக்கு பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும். இந்த நிமிடம் வரை எந்த கட்சியும் இறுதிக் கூட்டணி இதுதான் என அறிவிக்கவில்லை. கூட்டணியில் இருப்பவர்கள் வெளியேறலாம், புதியவர்கள் வரலாம். கூட்டணியில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளன’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
