பழநி, ஜன. 5: பழநி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தென்னை மரத்தில் நேற்று திடீரென தீப்பிடித்தது. சில நொடிகளிலே தீ மளமளவௌ பற்றி எரிய துவங்கியது. இதை கண்ட நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் அலறியடித்து அங்குமிங்கும் ஓடினர். இதுகுறித்து உடனே பழநி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தென்னை மரத்தில் தண்ணீரை பாய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
