நத்தம், ஜன. 5: நத்தம் அருகே சிறுகுடியில் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் பெரியகுளம் வேளாண்மை பல்கலைக்கழக தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் தங்கி களப்பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாணவிகள் அப்பகுதியில் விவசாயிகளுக்கான அழைப்பு மையம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
இதில் விவசாயிகளுக்கான அழைப்பு மையம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாணவிகள் விளக்கினர். மேலும் வேளாண் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள மேற்கண்ட மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தனர். இதில் அப்பகுதி விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
