வலங்கைமான், ஜன. 5: வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில் பழுதடைந்து நிலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிறுத்தம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலங்கைமான் அடுத்த சந்திரசேகரபுரம் ஊராட்சியில் வலங்கைமான் பாபநாசம் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.
மேலும் சாலைகள் பராமரிக்கப்படும் போது, உயரமானதால் ஏற்கனவே பழுதடைந்தபேருந்த நிறுத்தத்திற்குள் தண்ணீர் தேங்கி விடுகிறது. குளம் பொல் தண்ணீர் தேங்குவதால் உள்ளே பயணிகள் செல்ல முடிவதில்லை. மேலும் மழைநீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் பழுதடைந்த பேருந்து நிறுத்தத்தை அகற்றிவிட்டு புதிய பேருந்து நிறுத்தம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
