- வெற்றி வாக்குச்சாவடி
- முத்துப்பேட்டை ஒன்றியம்
- முத்துப்பேட்டை
- வெற்றி வாக்குச்சாவடி பிரச்சாரக் கூட்டம்
- என் வாக்காளர்கள்
- ஜம்புவானோடை பஞ்சாயத்து தொகுதி
- திருவாரூர் மாவட்டம்...
முத்துப்பேட்டை, ஜன. 5: முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மூன்று இடங்களில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை ஊராட்சி பாகம் 251 முதல் 257 வரையிலான பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார்.
மேலும், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரையை துவக்கி வைத்து திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறவேண்டும் என கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட மீனவர் அணி தலைவர் கந்தசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் சிவா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் தினேஷ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சிவ.மகேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் இளைஞர் அணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
