- பவுர்ணமி
- கடுவேலி சித்தர் கோயில்
- முத்துப்பேட்டை
- பரமநாதசுவாமி
- தொண்டு அறக்கட்டளைகள் திணைக்களம்
- கடுவெளி
- திருவாரூர்
- பிரதோஷ
- மார்கழி
- இறைவன்
- விநாயகர்
முத்துப்பேட்டை, ஜன. 5: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கடுவெளியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பரமநாதசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
அதன்படி மார்கழி மாத பவுர்ணமியையொட்டி விநாயகர், பரமநாதசுவாமி, வாலாம்பிகை மற்றும் கடுவெளி சித்தருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் மற்றும் திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. பின்னர் சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது. இதில் கடுவெளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
