புதுக்கோட்டை, ஜன.5: புதுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கடும் பனிப்பொழிவு, குளிரால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. தொடர்ந்து பனி கொட்டுவதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர்.
மேலும் வாகனங்களில் செல்லும்போது, முன்னால் செல்லும் வாகனங்கள் கண்களுக்கு தெரியாத நிலையில், பனிமூட்டம் காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கடும் குளிரால் பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனை சென்று வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை சுற்றுப்பகுதிகளில் தொடர் கடும் பனிப்பொழிவு, குளிரால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
