அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.24:   கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதில், வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்தும், பூத் கமிட்டியின் செயல்பாடு குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், சென்னை மெரினா கடற்கரையில் வரும் 27ம் தேதி முதல்வர் பங்கேற்கும் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில், கிழக்கு மாவட்டத்தில் இருந்து கட்சியினர், பொதுமக்களை சென்னைக்கு அழைத்து செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், காத்தவராயன், எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கட்டப்பன், தென்னரசு, சதீஷ்குமார், தங்கமுத்து, சோக்காடி ராஜன், கன்னியப்பன், மது(எ)ஹேம்நாத், ராமமூர்த்தி, ரவி, சைலேஷ் கிருஷ்ணன், வாசுதேவன், கல்பனா, பால்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>