தாய்மொழி கல்வி என்பது முறையாக இருக்கவேண்டும்: ஒன்றிய அமைச்சர் பேட்டி

மதுரை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது குடும்பத்தினரோடு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மன் மற்றும் சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: காசி தமிழ் சங்கமம் 4.0 வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கின்றோம்.

பிரதமரின் வழிகாட்டுதலின் படி கலை, பண்பாடு, கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய வகையிலே இந்த காசி தமிழ் சங்கமம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கலை, பண்பாடு கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வகையிலே நமது பிரதமரின் செயல்பாடு உள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் படி இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் தாய்மொழி கல்வி என்பது முறையாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் தான் இருக்க வேண்டும். அதுதான் தேசிய கல்விக் கொள்கையின் படி இருக்கிறது. மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தால் நிச்சயமாக எதிர்காலத்தில் நல்லதொரு உயர் பதவியோ அல்லது அதிகாரிகளாகவோ அவர்கள் வருவார்கள். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: