கோட்டூர் அரசு பள்ளி மாணவிகள் சாதனை

போச்சம்பள்ளி, ஜன.24:  கோவை மாவட்டம், மேட்டுபாளையத்தில் உள்ள வனக்கல்லூரில் 28வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. இதில் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் ராகானி, நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு, கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து மாநில அளவில் முதல் இடம் பிடித்து, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் மெளனசுந்திரி, ஆசிரியர்கள் சர்ஜான், பெருமாள், அஸ்கர், சத்தியகுமார், லட்சுமி, அருள் ஆகியோரை பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்தியாவினோத், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமு, ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி சுந்தரவடிவேல், விஏஓ லெனின் மற்றும் கிராம மக்கள் பாராட்டினர். கோட்டூர் பள்ளி மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக மாநில போட்டிக்கு தகுதி பெற்று வருகின்றனர்.

Related Stories: