கான்பூர்: உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ஐஐடி வளாகத்தில் 2000ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த ஐஐடி நிறுவனத்துக்கு ரூ.100கோடி நன்கொடை திரட்டி வழங்குவது என்று முடிவு செய்து உறுதிமொழி அளித்துள்ளனர். இது தொடர்பாக ஐஐடி கான்பூர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில்,\\” 2000ம் ஆண்டு ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்கள் ரூ.100கோடி நன்கொடை வழங்குவதற்கு உறுதிமொழி அளித்துள்ளனர். இது நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒரே பிரிவைச் சேர்ந்த முன்னாள் மாணவர்களால் வழங்கப்பட்ட மிக உயர்ந்த நன்கொடை யாகும். இது முன்னாள் மாணவர்களின் நன்கொடை வரலாற்றில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மைல்கல்லாகும். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
