என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி ஆனைகுளத்தில் திமுக பிரசாரம்

பணகுடி,டிச.30: வள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வள்ளியூர் அருகேயுள்ள ஆனைகுளத்தில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி என்ற தலைப்பில் பிரசாரம் நடந்தது. நிகழ்வுக்கு வள்ளியூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அலெக்ஸ் அப்பாவு தலைமை வகித்தார். நிர்வாகி துலுக்கர்பட்டி சேக், ஊராட்சி தலைவர் அசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பாக முகவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகள் குறித்த துண்டுபிரசுரங்களை கட்சியினர் வீடுவீடாகக் கொண்டுசென்று பொதுமக்களிடம் விநியோகம் செய்தனர்.

Related Stories: