நாசரேத் அருகே இலவச மருத்துவ முகாம்

நாசரேத். டிச. 30: நாசரேத் அருகே உள்ள ஒய்யான்குடி தூய திரித்துவ ஆலய வளாகத்தில் புத்தாண்டை முன்னிட்டு சாகுபுரம் டிசிடபுள்யூ தொழிற்சாலை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. டாக்டர் வெங்கட்ராமன், இலவச சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து நோய் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில் ஒய்யான்குடி சேகர தலைவர் ரூபன் மணிராஜ், ஆலய பரிபாலனர் சாமுவேல், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் எலிசபெத் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: