×

கார் மோதி தொழிலாளி பலி

பாலக்காடு,டிச.25: கோட்டயம் மாவட்டம் வைக்கத்தைச் சேர்ந்தவர் வினீஸ் (45). இவருக்கு ஷிமி என்ற மனைவி, விஸ்மயா என்ற மகளும் உள்ளனர்.இவர் கொரட்டி அருகே முரிங்கூரிலுள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு இவர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது திருச்சூர் சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவரை ஹைவே போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சாலக்குடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிந்தார்.

 

Tags : Palakkad ,Vaikot ,Kottayam district ,Shimi ,Vismaya ,Muringur ,Koratty ,
× RELATED மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா