திண்டுக்கல், டிச.30: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் தொடர்பாக 327 மனுக்கள் பெறப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு டிஆர்ஓ ஜெயபாரதி தலைமை வகித்தார்.
இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 327 மனுக்கள் மீது மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கீர்த்தனா மணி, சுந்தரமகாலிங்கம், செல்வன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
