தி. கோட்டில் நாளை திமுக செயற்குழு கூட்டம் மூர்த்தி எம்எல்ஏ அறிக்கை

திருச்செங்கோடு, ஜன.22: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்செங்கோடு சி.எச்.பி. காலனியில் உள்ள நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட நிர்வாகிகள்,  தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும்  தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் விதம் பற்றியும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை நடக்கிறது. இவ்வாறு மூர்த்தி எம்எல்ஏ கூறியுள்ளார்.

Related Stories:

>