ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் உண்டியல் திறப்பு

ஓசூர், ஜன.22: ஓசூரில் பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரர் கோயிலில் உள்ள 8 உண்டியல்கள், 6 மாதத்திற்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கை மற்றும் நகைகள் கணக்கிடப்படுவது வழக்கம். நேற்று காலை உண்டியல்கள் திறக்கப்பட்டன. மாலை வரை காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 5 கிராம் தங்கம் மற்றும் 35 கிராம் வெள்ளி, ₹6 லட்சத்து 65 ஆயிரத்து 697 ரொக்கத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பிரகாஷ், ராமமூர்த்தி, பிரபு மற்றும் கோயில் செயல் அலுவலர் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>