டெல்லி: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப் பயணமாக நாளை(மார்ச்.14) அசாம் செல்கிறார். அசாம் மாநிலத்தில் 2 நாட்கள் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அசாம் மாநிலத்தில் ரூ.47,800 கோடி மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அசாமில் ரயில் பெட்டி பழுதுபார்க்கும் தொழிற்சாலை மற்றும் 6 பாலங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அசாம் மாநிலத்துக்கு புதிதாக 3 ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார்.
