செய்துங்கநல்லூர், டிச. 27: கொங்கராயக்குறிச்சி சேகரம் தூய திருத்துவ சிஎஸ்ஐ தேவாலயத்தில் ஆண்டுதோறும் டிச.26ம் தேதி ஆண்கள் ஐக்கிய சங்க பண்டிகை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான பண்டிகை ஆராதனை நேற்று சேகரகுருவானவர் ஜான் பால்ராஜ் சாமுவேல் தலைமையில் நடந்தது. காலை 9 மணிக்கு நற்கருணை ஆராதனை, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆண்கள் ஐக்கிய சங்க பண்டிகை சிறப்பு ஆராதனை நடந்தது. கோவை ஹேவன்லி லைப் மிஷன் ஓபேத் ஜூலியஸ் செய்தி அளித்தார். குருவானவர் ஜான் பால்ராஜ் பேசுகையில், ஆண்கள் மன அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். குடும்பத் தலைவர்கள் எதையும் பெருசாக எடுத்துக் கொள்ளாமல் மன அழுத்தம் இல்லாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி ஜெபம் செய்து பண்டிகை ஆராதனையை நிறைவு செய்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கொங்கராயக்குறிச்சி ஆலயத்தில் ஆண்கள் ஐக்கிய சங்க பண்டிகை
- ஆண்கள் ஐக்கிய சங்க விழா
- கொங்கராயக்குறிச்சி கோவில்
- சேதுங்கங்கநல்லூர்
- கொங்கராயக்குறிச்சி சேகரம் தூய
- திருத்துவம்
- சிஎஸ்ஐ
- தேவாலயத்தில்
- சேகரகுரு
- ஜான் பால்ராஜ் சாமுவேல்
