ரவை குலாப் ஜாமுன்

தேவையான பொருட்கள்

ஒரு கப்ரவை
ஒன்றரை கப்சர்க்கரை
மூன்று கப்பால்
அரை ஸ்பூன்ஏலக்காய்த்தூள்
2 டேபிள் ஸ்பூன்நெய்

செய்முறை

வாணலியில் சிறிதளவு நெய் விட்டு ரவையை வறுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கப் ரவைக்கு மூன்று கப் பால் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும். வாணலியில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது இறக்கி ஆற வைக்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து 5 நிமிடம் நன்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் கைகளில் நெய் தடவிக்கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரைப்பாகு எடுக்க ஒரு கப் சர்க்கரைக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து பாகு எடுத்துக் கொள்ளவும். சர்க்கரைப் பாகுடன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்கவும். என்னை மிதமாக காய்ந்தவுடன் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதனை ஜீராவில் சேர்க்கவும்.சிறிது நேரம் ஊறிய பின்னர் சுவையான ரவை குலாப்ஜாமுன் தயார்