ரவை ஆம்லெட் தோசை

தேவையான பொருட்கள்

1 கப் ரவை
½ கப் தயிர்
¾ கப் தண்ணீர்
1 முட்டை
1/2நறுக்கின கேப்ஸிகம்
1/2நறுக்கின கேரட்
3 டேபிள் ஸ்பூன் நறுக்கின வெங்காயம்
3 டேபிள் ஸ்பூன் நறுக்கின கொத்துமல்லி

செய்முறை

ரவை, உப்பு மற்றும் தயிரை சேர்த்து கலக்கவும்.தண்ணீரை சேர்த்து மறுபடியும் கலக்கவும் மற்றும் அதை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.10 நிமிடங்களுக்கு பிறகு நறுக்கிய வெங்காயம், கேப்சிகம், கேரட் மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.ஒரு முட்டையைச் சேர்த்து நன்றாக கலக்கவும்.ஒரு தவாவில் கொஞ்சம் என்னை சேர்த்தி தோசை போடவும். சூடாக பரிமாறவும்.