திமுக மக்கள் கிராம சபை கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம் செவ்வாப்பேட்டை ஊராட்சி திமுக சார்பில்  அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர்ஆர்.ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் அன்பு என்கிற ஆல்பர்ட்,ஊராட்சி மன்ற தலைவர் டெய்சிராணி ஆல்பர்ட் ஆகியோர் ஏற்பாட்டில் ஒன்றிய குழு உறுப்பினர் வேதவள்ளி சதிஷ், ஊராட்சி செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு பேசினர். இதில் ஒன்றிய நிர்வாகிகள் த.எத்திராஜ், கே.சொக்கலிங்கம்,  கே.எட்வின், கே.ஏ.அபினாஷ், திலிப்ராஜ், லெனின், அருண்கீதன், சி.சதீஷ்குமார்,  அ.சதீஷ்குமார், ரா.சர்வின், ஆரோக்கியமேரி, இளவழகன், மதி, தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.    

Related Stories:

>