×

10அம்ச ேகாரிக்கைளை வலியுறுத்தி செவிலியர்கள்தொடர் காத்திருப்பு போராட்டம்

புதுக்கோட்டை, டிச.23: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட 619 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 619 மனுக்களை பொது மக்கள்அளித்தனர். பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருணா, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

Tags : Pudukkottai ,Pudukkottai Collectorate ,Public Grievance Redressal Day ,Pudukkottai District Collectorate ,
× RELATED ஏம்பல் பகுதியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்