ஜெயங்கொண்டம், டிச.23: ராமநாதபுரத்தில் ஆசிரியை தாக்கப்பட்டதை கண்டித்தும், ஆசிரியர் ஆசிரியைகளுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் அரியலூர் மாவட்டம் முழுதும்கருப்பு பேட்ச் அணிந்து ஆசிரியர் ஆசிரியைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியை வெளி நபர்களால் பள்ளி நேரத்தில் அத்துமீறி வகுப்புகறைக்குள் புகுந்து, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கப்பட்டதை கண்டித்து, அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் நேற்று ஒரு நாள் கருப்பு பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவர்களுக்கு வழங்குவது போன்று ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிட்ட அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி அனைத்து நிலை ஆசிரியர் ஆசிரியைகள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
