- திருக்குவளை அரசுப் பள்ளி
- கில்வேலூர்
- திருக்குவளை அரசு மேல்நிலைப் பள்ளி
- நாகப்பட்டினம்
- பள்ளி
- சட்டியகுடி சாலை
கீழ்வேளூர், டிச.23: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருக்குவளை அரசு மேல்நிலைப்பள்ளியில்பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சாட்டியகுடி சாலை வரை பேரணி நடைபெற்றது. பிளாஸ்டிக், மக்கும் குப்பை ,மக்கா குப்பை, மழைநீர் சேமிப்பு,மரம் வளர்த்தல் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் முழக்கங்களை கோஷமிட்டு சென்றனர். பேரணியை திருக்குவளை காவல் உதவி ஆய்வாளர் முருகானந்தம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை ஜெய்குமாரி, தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், உதவி தலைமை ஆசிரியர் சரவணன், பசுமை பள்ளி பொறுப்பாளர்கள் தியாகசுந்தரம், அருண், தேசிய பசுமைப்படை ஆசிரியர் கணேசன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் சிவசக்தி, ஆசிரியைகள் அழகு, இந்திரா, முதல் நிலை காவலர்கள் சக்தி கணேஷ், பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியின்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
