- தரங்கம்பாடி
- மயிலாதுதுரை மாவட்டம்
- அயப்பாடி
- திருக்களச்சேரி
- டூலக்கட்டி
- Sankaranpandal
- இலுப்பூர்
- நல்லாடை
- அரும்பாக்கம்
தரங்கம்பாடி, டிச. 23: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களுக்கு விவசாயிகள் உரம் இட்டும், மருந்து அடித்தும் காப்பாற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தரங்கம்பாடி பகுதியில் ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துகட்டி, சங்கரன்பந்தல், இலுப்பூர், நல்லாடை, அரும்பாக்கம், திருவிளையாட்டம். ஈச்சங்குடி, எரவாஞ்சேரி, கொடவிளாகம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் பெய்ததொடர் மழையால் நெற்பயிர்கள் மழையில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் மழை நீரை வடிய வைத்து பயிர்களுக்கு உயிரூட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிர்களின் வளர்ச்சிக்காக யூரியா, பொட்டாஷ் உரங்களை போட்டு வருகின்றனர். மேலும் ஆனைக்கும்பன், நிலச்சுருட்டும்புழு, குருத்துபுழு உள்ளிட்ட பூச்சிகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் நிலை இருப்பதால் அவற்றை ஒழிக்க மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த ஆண்டு எலிகளின் தொல்லை அதிகம் இருப்பதால் பயிர்கள் வீணாகிப் போகின்றன. எலிகளை பிடிக்க அதன் வலைக்குள் (குழி) புகையை மூட்டம் செலுத்தி எலியை ஒழித்து வருகிறார்கள்.
