×

மலைச்சாலையில் மது அருந்தினால் நடவடிக்கை

பழநி, டிச.23: கொடைக்கானல் மலைச்சாலையில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் செல்லும் பழநி-கொடைக்கானல் மலைச்சாலை இயற்கை எழில் சூழ்ந்ததாகும். இங்கு சிறுத்தை, யானை, குரங்கு உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இந்நிலையில் பழநி- கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், மீதமாகும் அல்லது அழுகிய உணவு பண்டலங்களை சாலைகளில் விலங்கினங்களுக்கு வைத்து செல்கின்றனர். இதனை உண்ணும் வனவிலங்குகளுக்கு உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் வனத்துறையினர் சாலையோரங்களில் உணவுகளை வைக்க வேண்டாமென எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மலைச்சாலைகளில் அமர்ந்து சிலர் மது அருந்துவது, புகை பிடிப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் பயன்படுத்தும் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பைகளால் வன உயிரினங்கள் பாதிப்பிற்குள்ளாகின்றன. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags : Palani ,Kodaikanal ,road ,Western Ghats ,Palani-Kodaikanal mountain ,
× RELATED தாமிரபரணி அன்னைக்கு சிறப்பு வழிபாடு