வெள்ள சேத கணக்கெடுப்பு பணி இந்த வாரம் முடியும்

நெல்லை, ஜன. 21: நெல்லை மாவட்டத்தில் வெள்ள சேத கணக்கெடுப்பு பணிகள் இந்த வாரத்தில் முடிவடையும் என கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார். இதுகுறித்து நெல்லையில் கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை  மாவட்டத்தில் மழை, வெள்ள சேதம் குறித்து வேளாண்மை துறையினர்,  வருவாய்த்துறையினர், புள்ளியியல் துறையினர் இணைந்து கணக்கெடுப்பு நடத்தி  வருகின்றனர். மானூர் பகுதியில் பயறு வகைகள் சேதம் அடைந்துள்ளது. தற்ேபாது வயல்களில் தேங்கியிருந்த தண்ணீர் வடிந்து விட்டது. இதனால் நெற்பயிர்களுக்கு  பெரிய அளவுக்கு சேதமில்லை. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 18 கூட்டுக்  குடிநீர் திட்டங்களில் 6 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர்  விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை பகுதியில் இயல்பு நிலை  திரும்பியுள்ளது. வெள்ள சேத கணக்கெடுப்பு பணிகள் இந்த வாரத்தில்  முடிவடையும்.

Related Stories:

>