திருவாடானை, டிச.22: திருவாடானை அருகே பாரதிநகர் குட்லக் மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) முருகானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்படும்போது செய்யக் கூடிய அவசரகால தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொள்வது குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கு கூடியிருந்த பொதுமக்களிடமும், மருத்துவமனை ஊழியர்களிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கினர். பின்னர் செயல்விளக்கம் செய்து காண்பித்து அதன் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினர். இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
