துபாய்: துபாயில் 19 வயதுக்குபட்டோருக்கான ஜூனியர் 12வது ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் ேபாட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. மழை காரணமாக ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்திய அணியில் ஓபனராக இறங்கிய நட்சத்திர ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்சி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த கேப்டன் ஆயுஷ் மாத்ரே 38 ரன், மல்கோத்ரா 12 ரன், திரிவேதி 7 ரன், அபியான் குண்டு 22 ரன், கிலான் பட்டேன் 6 ரன், ஹெனில் பட்டேல் 12 ரன், தீபேஷ் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடிய ஆரோன் ஜார்ஜ் 85 ரன்னிலும், கேனிஷ்க் சவுகான் 46 ரன்னிலும் வெளியேறினார். இதனால், இந்திய அணி 46.1 ஓவரில் 240 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக முகமது சயும், சுபான் தலா 3 விக்கெட் எடுத்தனர்.
அடுத்து 241 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்களில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்கை தொட்டனர். இதில் அதிகபட்சமாக ஹூசாபியா அசான் 70 ரன், கேப்டன் பர்கான் யூசப் 23 ரன், உஸ்மான் கான் 16 ரன் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 41.2 ஓவரில் 150 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆக இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தீபேஷ், கேனிஷ்க் சவுகான்தலா 3 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் ஏ பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது.
