×

டி20 சூப்பர் 8 சுற்றில் சொதப்பல்: பாகிஸ்தான் வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; சாட்டையை சுழற்றும் பிசிபி

கராச்சி: உலகக் கோப்பை டி20 சூப்பர் 8 சுற்றில் வெற்றிகளை குவிக்காமல் வெளியேறிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை டி20 போட்டிகளில் இந்தியாவில் ஆட முடியாது என அடம் பிடித்து வரும் பாகிஸ்தான் விருப்பப்படி, இலங்கையில் போட்டிகள் நடந்தன. இலங்கையில் நடந்த லீக் சுற்றுப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாக். அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தட்டுத்தடுமாறி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற பாக். அணி, குரூப் 2 பிரிவு புள்ளிப் பட்டியலில் பின்தங்கி இருந்தது. கடைசியாக இலங்கையுடன் நடந்த போட்டியில் பாக். முதலில் ஆடி 212 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி இருந்தால் நியூசிலாந்தின் நெட் ரன் ரேட்டை விட அதிகமாகி, செமி பைனலுக்கு பாக். தகுதி பெற்றிருக்க முடியும். ஆனால், அந்த போட்டியில் இலங்கை அணி 207 ரன்கள் குவித்ததால் வெறும் 5 ரன் வித்தியாசத்தில் மட்டுமே பாக். அணியால் ஆறுதல் வெற்றி பெற முடிந்தது. அதையடுத்து, ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி செமி பைனலுக்கு முன்னேறியது.

இந்நிலையில் செமி பைனலுக்கு தகுதி பெறத் தவறிய பாக். அணி வீரர்கள் அனைவருக்கும் பாக். கரன்சியில் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்க பாக். கிரிக்கெட் வாரியம் (பிசிபி) முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டில் இருந்து வெளிவரும் எக்ஸ்பிரஸ் டிரிபியுன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றபோதே, இந்த அபராதத்தை விதிக்க முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. பாக். வீரர்களிடம், அவர்களின் செயல்பாட்டை பொறுத்தே இனி ஊதியம் தர முடியும் என, பிசிபி அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து பாக். கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடவில்லை.

Tags : T20 Super 8 round ,Karachi ,World Cup T20 Super 8 round ,World Cup T20 ,India… ,
× RELATED வெஸ்ட் இண்டீசை விரட்டி அரையிறுதிக்கு...