×

1 டெஸ்ட், 3 ஓடிஐயில் ஆட ஆப்கன் அணி ஜூனில் இந்தியாவுக்கு வருகை: சென்னையிலும் ஒரு போட்டி

புதுடெல்லி: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, வரும் ஜூன் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்ட அறிவிப்பு: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் ஜூனில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் ஆடவுள்ளது. வரும் ஜூன் 6ம் தேதி, நியூ சண்டிகாரில் டெஸ்ட் போட்டி துவங்கும். பின்னர், வரும் ஜூன் 14ம் தேதி தர்மசாலாவில் முதல் ஒரு நாள் போட்டியும், 17ம் தேதி லக்னோவில் 2வது ஒரு நாள் போட்டியும், 20ம் தேதி சென்னையில் 3வது ஒரு நாள் போட்டியும் நடைபெற உள்ளன. இவ்வாறு பிசிசிஐ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே, கடந்த 2018ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக தற்போது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் லீக் சுற்றிலேயே ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து, அந்த அணிக்கு புதிய பயிற்சியாளராக, ஜோனாதன் டிராட் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,Chennai ,New Delhi ,Afghanistan cricket ,Board of Control for Cricket in India ,BCCI ,
× RELATED வெஸ்ட் இண்டீசை விரட்டி அரையிறுதிக்கு...