×

மெரிடா ஓபன் டென்னிஸ் பேஷா வென்ற பூக்ஸா: முதல் முறை சாம்பியனாகி அசத்தல்

மெரிடா: மெக்சிகோவில் நடந்து வரும் மெரிடா ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நேற்று, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பூக்ஸா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மெக்சிகோவின் மெரிடா நகரில் மெரிடா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த அரையிறுதிப் போட்டிகளில் ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பூக்ஸா, போலந்து வீராங்கனை மேக்தலீனா பிரெச் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

இந்நிலையில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்த இரு வீராங்கனைகளும் மோதினர். போட்டியின் முதல் செட்டில் கிறிஸ்டினா பூக்ஸா ஆக்ரோஷமாக மோதி ஆதிக்கம் செலுத்தினார். ஒரு புள்ளி மட்டுமே விட்டுத் தந்த அவர், 6-1 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தினார். இருப்பினும் 2வது செட்டில் சுதாரித்து சிறப்பாக ஆடிய மேக்தலீனா, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் மீண்டும் கிறிஸ்டினாவின் கை ஓங்கிக் காணப்பட்டது. அந்த செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் அவர் வென்றார். அதன் மூலம் 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார். பூக்ஸா, முதல் முறையாக ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம்் வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Puxa ,Merida Open ,Merida ,Merida Open women ,Mexico ,Cristina Puxa ,Merida, Mexico… ,
× RELATED வெஸ்ட் இண்டீசை விரட்டி அரையிறுதிக்கு...