திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம்

பள்ளிபாளையம், ஜன.17:  குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், பாதரையில் நடைபெற்றது. பள்ளிபாளையம் ஒன்றிய திமுக  பொறுப்பாளர் யுவராஜ், தலைமை தாங்கி பேசினார். மேற்கு மாவட்ட  திமுக செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். மாவட்ட இளைஞரணி  அமைப்பாளர் மதுரா செந்தில், துணை அமைப்பாளர் செல்வம், ஒன்றிய இளைஞரணி  அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் குமார், முன்னாள் தலைமை  செயற்குழு உறுப்பினர் வெப்படை செல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினர்.  மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு 19ம்தேதி வருகை தரும் திமுக தலைவர்  ஸ்டாலினை வரவேற்க, 300 மோட்டார் பைக்கில் சீருடை அணிந்த திமுக இளைஞரணியினர்  சங்ககிரி தீரன் சின்னமலை நினைவு வளாகத்தில் இருந்து 8 கி.மீ அணிவகுத்து  வருவதென தீர்மானம் நிறைவேற்றப்படடது.

திருச்செங்கோடு: நாமக்கல் மேற்கு மாவட்ட  திமுக  செயற்குழு கூட்டம், திருச்செங்கோட்டில் மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், பொருளாளர் குமார், மொழிப்போர் தியாகி பரமானந்தம் முன்னிலை வகித்தனர்.  மாவட்ட செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசினார். வரும் 19ம்தேதி பாதரையில் நடைபெறும் மக்கள் கிராமசபை கூட்டத்திற்கு வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, வெப்படை நால் ரோட்டில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர் அம்பிகாபாண்டியன், அன்பழகன், ஒன்றிய செயலாளா–்கள் வட்டூர் தங்கவேல், கபிலர்மலை சண்முகம், எலச்சிபாளையம் தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>