புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கான செலவினங்களை அதிகரிக்க பான் மசாலா உற்பத்தி அலகுகளுக்கு செஸ் விதிக்கக் கோரும் மசோதாவை நாடாளுமன்றம் அங்கீகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. நேற்று மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட்டு, பண மசோதா என்பதால் நாடாளுமன்ற ஒப்புதலுக்காக மீண்டும் மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநிலங்களில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது,’ இது கூட்டாட்சியின் உணர்வுக்கு எதிரானது. சுகாதார உள்கட்டமைப்பைப் பராமரிக்க மாநில அரசுகளுக்கு கிடைக்கும் நிதியை இழக்கச் செய்யும்’ என்று கூறி, எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
