புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் அதிமுக அதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியை அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது ஆகியவைக்கு எதிராக தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் தொடரப்பட்ட வழக்கானது நிலுவையில் தற்போது வரையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2022 ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், அதேபோன்று பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் சூரிய மூர்த்தி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் சூரியமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை நிராகரித்தது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சூரியமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தன்னை அதிமுக கட்சியின் உறுப்பினர் கிடையாது. இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு உரிமை இல்லை என்று கூறப்பட்டதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. இது சட்ட விதிகளுக்கு முரணானது ஆகும். எனவே அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதித்து அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
