கட்சி விதிமுறைகளை சமர்ப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் 30 நாள் கெடு

புதுடெல்லி: கட்சியின் விதிமுறைகள் அடங்கிய நகலை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் எழுதியுள்ள கடிதம்: கட்சியின் நோக்கங்கள் மற்றும் ஜனநாயக முறையில் செயல்படுவதற்கு அது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த முக்கிய தகவல்களைக் கொண்ட ஒரு முக்கியமான ஆவணம் தான் கட்சியின் விதிமுறைகள். எனவே அனைத்து அரசியல் கட்சிகள் தங்கள் சமீபத்திய கட்சியின் சட்டவிதிமுறை நகல்களை புதுப்பிக்கப்பட்ட திருத்தங்களுடன் 30 நாட்களுக்குள் ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் கட்சி சட்டவிதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு மற்றும் அனைத்து திருத்தங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: