அமெரிக்காவிலிருந்து மேலும் 55 ஈரானியர்கள் நாடு கடத்தல்

தெஹ்ரான்: கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். அதன்படி ஈரானைச் சேர்ந்த 400 பேர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே குடியேற்ற துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.
சட்ட விரோதமாக குடியேறிய 120 ஈரானியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அவர்கள் கத்தார் வழியாக ஈரானுக்கு வந்தனர்.

அதை தொடர்ந்து மேலும் 55 ஈரானியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. 55 ஈரானியர்கள் நாடு கடத்தப்பட்டதை ஈரான் வெளியுறவு அமைச்சக அதிகாரி மொஜ்தாபா ஷஸ்தி கரீமி உறுதி செய்துள்ளார். டிரம்பின் குடியேற்றவாசிகளுக்கு எதிரான நிலைப்பாடு, குறிப்பாக ஈரானியர்களுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையால் பலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று கரீமி தெரிவித்தார். ஈரான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறுகையில், அமெரிக்காவில் இருந்து மேலும் 55 ஈரானியர்கள் ஈரானுக்கு புறப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories: