சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்தார். சித்த மருத்துவ பல்கலை. அமைப்பது தொடர்பான மசோதா 2022 ஏப்ரலில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2022-ல் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவில் 4 மாற்றங்களை ஆளுநர் கோரியிருந்த நிலையில் கடந்த அக்டோபரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. சித்த மருத்துவ பல்கலை. குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துகள் நிராகரிக்கப்பட்டு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3 ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தற்போது ஆளுநர் ரவி அனுப்பி வைத்துள்ளார்.

Related Stories: